தயவு செய்து என் ஆக்கங்களை காப்பி செய்து என் அனுமதி இல்லாமல் பிற தளங்களுக்கு அனுப்பாதீர்கள்.

Tuesday, February 9, 2010

மாங்காய் சாலட் வித் சாட் மசாலா - Green Mango salad

தேவையான பொருட்கள்



மாங்காய் = ஒன்று

கேரட் = ஒன்று
குகும்பர் = ஒன்று
ரெட் (கேப்சிகம்)பெப்பர் = கால் துண்டு
கிரீன் (கேப்சிகம்)பெப்பர் = கால் துண்டு
யொல்லா (கேப்சிகம்) பெப்ப‌ர் = கால் துண்டு
கேபேஜ் = கால் கப்
சாட் ம‌சாலா = அரை தேக்க‌ர‌ண்டி
தேன் = அரை தேக்க‌ர‌ண்டி
எலுமிச்சை சாறு = அரை தேக்கரண்டி






செய்முறை


மேலே குறிப்ப்பிட்ட‌ அனைத்து காய்க‌ளையும் பைனாக‌ பொடியாக‌ சாப் செய்து உப்பு, சாட்ம‌சாலா,தேன்,லெம‌ன் சாறு சேர்த்து கிள‌றி சாப்பிடலாம்.

இது பார்டியில் வைத்தால் க‌ல‌ர்ஃபுல்லாக‌வும் ரிச்சாக‌வும் இருக்கும்.


மாங்காய் சேர்த்து இது போல் சால‌ட் சாப்பிட்டால் இந்த‌ சுவையை விட‌வே மாட்டீர்க‌ள்.

குறிப்பு
இது கர்பிணி பெண்கள் வாய்க்கு ரொம்ப ருசிபடும், கேன்சர் வியாதி உள்ளவர்கள், கீமோ தரபி செய்ததும் ஏற்படும் வாய்கசப்பிற்கும் ஏற்றது.

ஜ‌லீலா

Sunday, February 7, 2010

அவார்டும் சேமியா கேசரி ‍- Award- seemiya kesari

இந்த இரண்டு அவார்டையும் விக்கிஸ் கிச்சன் எனக்கு கொடுத்து இருக்காங்க இதை இன்று என் திருமண நாளில் சேமியா கேசரியுடன் பகிர்ந்து கொள்கிறேன்


இந்த பியுட்டிஃபுல் பிலாக் அவார்டை மலிக்காவின் இனிய பாதைக்கு பாயிஜாவின் என்‍-இனிய இல்லத்துக்கும் கொடுக்கிறேன்




இந்த அவார்டை (Friendly Cheer Readers) என் பிலாக் படிக்கவரும் அனைத்து உள்ளங்களுக்கும் கொடுக்கிறேன்.








viki'skitchen




இந்த இரண்டு அவார்டையும் விக்கிஸ் கிச்சன் எனக்கு கொடுத்து இருக்காங்க இதை இன்று என் திருமண நாளில் சேமியா கேசரியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.





சேமியா கேசரி



தேவையான‌ பொருட்க‌ள்

சேமியா = ஒரு கப்
சர்க்கரை = கால் கப்
முந்திரி, பிஸ்தா = இரண்டு மேசை கரண்டி
கேசரி கலர் பொடி = ஒரு சிட்டிக்கை
நெய் = இரண்டு மேசை கரண்டி
பட்டை, ஏலம் = தலா ஒன்று
உப்பு ‍= அரை சிட்டிக்கை





செய்முறை

ஒரு மேசை கரண்டி நெயில் முந்திரி, பிஸ்தாவை வ‌றுத்து த‌னியாக‌ எடுத்து வைக்க‌வும்.
அதே பாத்திர‌த்தில் சேமியாவை க‌ருகாம‌ல் வ‌றுத்து அதையும் தனியாக ஒரு தட்டில் கொட்டி ஆற‌வைக்க‌வும்.

ஏற்க‌ன‌வே வ‌றுத்த‌ பாத்திர‌த்தில் மீதி உள்ள நெயை ஊற்றி ப‌ட்டை, ஏல‌ம் போட்டு ஒன்ன‌றை க‌ப் த‌ண்ணீரில் ரெட் கலர் பொடி கரைத்து ஊற்றி உப்பை சேர்கக்வும்.
கொதிக்கும் போது சேமியாவை சேர்த்து கிள‌றி தீயின் த‌ன‌லை சிம்மில் வைத்து வேக‌ விட‌வும்.

வெந்து த‌ண்ணீர் வ‌ற்றும் போது ச‌ர்க்க‌ரை சேர்த்து கொதிக்க‌ விட‌வும். ச‌ர்க்க‌ரை சேர்த்த‌தும் மீண்டும் த‌ண்ணீர் விடும் கொதித்து வ‌ரும் போது வ‌றுத்த‌ முந்திரி, பிஸ்தா சேர்த்து சிறிது த‌ண்ணீர் நிற்கும் போதே அடுப்பை அனைக்க‌வும். 5 நிமிட‌த்தில் கெட்டியாகி விடும்.





இதில் க‌டைசியாக‌ தேங்காய் துருவ‌ல் சேர்த்தால் ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கும் ந‌ட்ஸ் வ‌கைக‌ள் விருப்ப‌ம் போல் சேர்க்க‌லாம், கிஸ்மிஸ் ப‌ழ‌மும் சேர்த்து கொள்ள‌லாம். (தேங‌காய் துருவ‌ல், கிஸ்மிஸ் ப‌ழ‌ம் இதில் நான் சேர்க்க‌ வில்லை)


கேச‌ரிக்கு அடுத்து ஈசியாக‌ நினைத்த‌வுட‌ன் செய்யும் இனிப்பு வ‌கை இது என் மாமியார் ஈதுக்கு செய்வார்க‌ள், என் க‌ண‌வ‌ருக்கு ரொம்ப‌ பிடிக்கும் ஆகையால் இதையே இன்று செய்து விட்டேன்



==========================================================







இந்த இன்ட்ரெஸ்டிங் அவார்டு முன்பு பாயிஜாவும், ஷபிக்ஸும் எனக்கு கொடுத்தது இதை கீழே உள்ள பதிவர்களுக்கு கொடுக்கிறேன்.




ஸாதிகா அக்கா நல்ல பயனுள்ள அறிய தகவல்கள் , கதை, அவர்கள் எல்லா பதிவும் நல்ல இருக்கும்.




ஹுஸைன்னாம்மா தினசரி வாழ்வில் நடக்கும் சம்பவங்களை, அவர்கள் அனுபவங்களை சிறிது நகைச்சுவை கலந்து போடுவார்கள்.இவ‌ங்க‌ ப‌திவ‌ ப‌டிக்க‌ நான் த‌வ‌றுவ‌தில்லை.





நாஞ்சில் பிராதாப் எல்லா பதிவுகளும் நகைச்சுவையுன் ஒரு நல்ல சேதியுடனும் இருக்கும், பதிவுக்கு பின் வரும் பின்னூட்டம் அதுக்கு மேல சூப்பரா இருக்கும்.இவ‌ர் ப‌திவுக‌ளை ஆர‌ம்ப‌த்திலிருந்து அப்ப‌ அப்ப‌ ப‌டித்தாலும். பின்னூட்ட‌ம் அவ்வ‌ள‌வா போட்ட‌தில்லை




வேல‌ன் சார் தொழில் நுட்ப‌ம் எல்லாமே அனைவ‌ருக்கும் ப‌ய‌னுள்ள‌ த‌க‌வ‌ல் ஒரு க‌ம்பியுட்ட‌ர் சென்ட‌ர் போகாம‌லேயே நிறைய‌ விழிய‌ங்க‌ளை அங்கு தெரிந்து கொள்ள‌லாம்.

அண்ணாமலையான், நல்ல அனுபவமான பயனுள்ள தகவல்கள்.


ப‌திவுக‌ள் க‌ம்மியா இருந்தாலும் எல்லா த‌க‌வ‌லும் ரொம்ப‌ ப‌ய‌னுள்ள‌து.




சித்ரா குறைந்த‌ மாத‌த்தில் ந‌ல்ல‌ மெசேஜுட‌ன், ந‌கைச்சுவையையும் அள்ளி தெளிக்கிறாங்க‌.

அனுபவங்களை நகைச்சுவையுடன் போட்டு இருக்கிறார்கள் அதை எல்லோரும் படித்து பயனடைந்து கொள்ளுங்கள். பிலாக், கணணி சம்பந்தப்பட்ட விழியங்களை வேலன் சாரின் பிலாக் சென்று படித்து பயனடைந்து கொள்ளுங்கள்



 
Gorgeous Beaches of Goa